இந்தியாவின் ட்விட்டர் ஆலோசகராக ஆகப்போவது யார்?
சமீபத்தில் இந்தியா வந்த ட்விட்டர் சிஇஓ ஜேக் டார்சி ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஷாருக்கானை சந்தித்தார். இதில், யார் இந்தியாவின் ட்விட்டர் ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ட்விட்டர் ஆலோசகர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்தியாவின் கலைதுறைக்கு ஏ.ஆர். ரஹ்மான் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்விட்டரில் அதிக ஆக்டிவ்வாக இருக்கும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 கோடி ட்விட்டர் ஃபாலோயர்கள் உள்ளனர். அதே போல பாலிவுட் பாட்ஷாவான ஷாருக் கானையும் ட்விட்டர் சி.இ.ஓ ஜேக் டார்சி சந்தித்து பேசியுள்ளார்.
இந்த இருவரில் ஒருவரை இந்தியாவிற்கான ட்விட்டர் ஆலோசகராக ஜேக் நியமிக்க உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.
இந்தியா வந்த ஜேக் பிரதமர் மோடி, ராகுல் காந்தி போன்ற தலைவர்களையும் சந்தித்தார். அவர் தனக்கு தென்னிந்திய உணவுகள் பிடிக்கும் என்றும் அதன் மெனு பட்டியலை போட்டோவுடன் பகிர்ந்திருந்தார். மேலும், இந்தியாவில் ஆட்டோவும் ஓட்டி மகிழ்ந்த ஜேக் அதன் வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.