நயன்தாராவின் பிறந்த நாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 34வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்தினர்.

நயன்தாராவின் பிறந்த நாளை இயக்குநரும் அவருடைய காதலருமான விக்னேஷ் சிவன், ஸ்பெஷல் கேக் வெட்டி கொண்டாடினார். அந்த கேக்கில் திரைத்துறை சம்பந்தப்பட்ட கேமரா, கிளாப் போர்டு உள்ளிட்ட விஷயங்கள் இருந்தன. மேலும், நயன்தாராவின் போட்டோவுடன் லேடி சூப்பர்ஸ்டார் என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தன.

கேக்குக்கு பின்னால், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மிகவும் நெருக்கமாக கட்டியணைத்தவாறு போஸ் கொடுத்திருந்தனர். நயன்தாரா ஸ்பெஷல் டிரஸ் ஏதும் அணியாமல் சிம்பிளாக வெள்ளை நிற டிசர்ட் மற்றும் ஆஷ் கலர் பேன்ட் மட்டுமே அணிந்திருந்தார். அவர்களின் பேக் கிரவுண்டில் அலங்கார விளக்குகள் மற்றும் பலூன்கள் பிரகாசித்தன.

விக்னேஷ் சிவன் ஷேர் செய்த இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

More News >>