தோல்வியின் பிடியில் இங்கிலாந்து - ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 93 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 346 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 479 ரன்கள் குவித்துள்ளது. இதில் அதிகப்பட்சமாக உஸ்மான் கவாஜா 171 ரன்களும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 83 ரன்களும் குவித்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. மிட்செல் மார்ஷ் 101 ரன்களும், ஷான் மார்ஷ் 156 ரன்களும் எடுத்தனர்.

இந்நிலையில், 303 ரன்கள் பின்தங்கியிருந்த இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால், தொடக்க ஆட்டகாரர் ஸ்டோன்மேன் [0], அலைஸ்டர் குக் [10], ஜேம்ஸ் வின்ஸ் [18], டேவிட் மாலன் [5], என அடுத்தடுத்து வெளியேற 68 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் [42], பைர்ஸ்டோ [17] இருவரும் களத்தில் உள்ளனர். மேற்கொண்டு 210 ரன்கள் எடுத்தால் தான் இன்னிங்ஸ் தோல்வியை இங்கிலாந்து அணி தவிர்க்க முடியும்.

More News >>