கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ள அஜித்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு தயாராகி கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு முடிந்த நிலையில், குடும்பத்துடன் கோவா சென்றுள்ளார் அஜித்.

நடிகர் அஜித், சினிமா வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறாரோ அதை விட அதிக முக்கியத்துவத்தை தனது குடும்பத்திற்காகவும் செலவிடுகிறார். மகளின் பள்ளிக்குச் செல்வது. மனைவி மற்றும் மகளுடன் நேரத்தை செலவிடுவது என மிகுந்த அக்கறை கொண்டவர்.

விஸ்வாசம் படத்திற்காக ஓய்வின்றி உழைத்த அஜித், தற்போது குடும்பத்துடன் கோவா சென்றுள்ளார். அஜித்தை கண்ட ஒருவர் அவருடன் செல்பி எடுக்க முயல, “நான் குடும்பத்துடன் வந்துள்ளேன், உங்க நம்பர கொடுங்க ஒரு மணி நேரத்தில் நானே சொல்லி அனுப்புகிறேன்” என்று கூறி, சொன்னது போல ஒரு மணி நேரத்திற்கு பின் அந்த ரசிகரை ஒரு இடத்திற்கு வரச் சொல்லி அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார். பின்னர் தனது சுற்றுலாவை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழித்து வருகிறார்.

சுற்றுலா முடிந்து சென்னை வரும் அஜித், அடுத்ததாக ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் புதுப் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். தீரன் படத்தை இயக்கிய வினோத் இப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More News >>