ஏடிபி டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியனான ஸ்வெரவ்!

உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை ஜெர்மனியை சேர்ந்த இளம் வீரர் ஸ்வெரவ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

லண்டனில் நடைபெற்று வந்த ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில், உலகின் நம்பர் ஒன் வீரரான நோவோக் ஜோகோவிச் மற்றும் ஜெர்மனியின் 21வயது இளம் வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் மோதினர்.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், நோவோக் ஜோகோவிச்சை 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

முன்னதாக ஆறு முறை சாம்பியன் பட்டம் வென்ற ரோஜர் பெடரரை காலிறுதி சுற்றிலேயே வெளியே அனுப்பி ஸ்வெரவ் அசத்தலாக அரையிறுதிக்குள் நுழைந்தார். அதே மேஜிக் ஆட்டத்தை ஜோகோவிச்சிடமும் வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரவுக்கு டென்னிஸ் ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

தனக்கு கிடைத்த வெற்றி தன் வாழ்நாளிலேயே மறக்க முடியாது ஒன்று, என்றும், இது எனக்கு டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் அளித்த பரிசு என்றும் ஸ்வெரவ் கூறினார். அவரது அபாரமான ஆட்டத்தை பார்த்தே பல வித்தைகள் தான் கற்றுக் கொண்டதாகவும், எப்படி இந்த வெற்றி தனக்கு கிடைத்தது என்பதை தற்போது கூட நம்பமுடியவில்லை என்றும், தனக்கு அவர் இந்த சாம்பியன் பட்டத்தை பரிசளித்துள்ளார் என்றும் பெருந்தன்மையுடன் ஸ்வெரவ் கூறி விதத்தில் ஜோகோவிச் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்துள்ளார்.

More News >>