அமெரிக்க பாராளுமன்றத்திற்கு போட்டி போடும் இந்திய வம்சாவளி பெண்
அமெரிக்க பார்லிமென்டிற்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அருணா மில்லர்(53) என்ற பெண், மேரிலாண்ட்டிலிருந்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அருணா மில்லர் [53] என்ற இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த பெண் கடந்த 2010ம் வருடம் முதல் அந்த பதவியில் உள்ளார். தற்போது, மேரிலாண்ட் மாகாண சபையின் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் ஜான் டிலனேயின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில், அருணா மில்லர், அப்பதவிக்கு போட்டியிட உள்ளார்.
இது குறித்து கூறியுள்ள மில்லர் கூறியதாவது, ”இங்கு வந்து குடியேறிய எனக்கு, நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. இதனை நான் முன்னெடுத்து செல்ல விரும்புகிறேன். அனைத்து குடிமக்களுக்கும் வாய்ப்புகளுக்கான கதவுகள் திறந்தே உள்ளன என்பதை உறுதிபடுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அருணா மில்லர் 7 வயதாக இருக்கும் போது, தனது பெற்றோருடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்து அங்கு சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். மேரிலாண்டு பகுதியில் மில்லரை தவிர்த்து அமெரிக்காவில் வசிக்கும் ஆப்கனை சேர்ந்த நாடியா ஹஸ்மி உள்ளிட்ட 4 பேர் போட்டியிட போவதாக அறிவித்துள்ளனர்.