கஜா புயல்: நிவாரணப்பணிகளுக்கு தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு #கஜா #gaja cyclone

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசு ரூ1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயலால் முழுவதும் சேதம் அடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு ரூ.10,000; பகுதி சேதம் அடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.4,100 நிவாரணம் வழங்கப்படும்.

முழுவதும் சேதம் அடைந்த விசைப்படகுகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். நெல் பயிர் சேதத்திற்காக ஒரு ஹெக்டருக்கு நிவாரணமாக ரூ.13, 500 வழங்கப்படும்.

புயல் நிவாரண பணிகளை செய்ய உடனடியாக ரூ.1000 கோடி நிதி வழங்கப்படும். உயிரிழந்த பசு மற்றும் எருமைகளுக்கு தலா ரூ10,000 காளை மாடுகளுக்கு தலா ரூ25,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெல்டா மாவட்டங்களில் ஹெலிகாப்டர் மூலம் நாளை ஆய்வு நடத்தப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

More News >>