சண்டைக் காட்சியை போல அந்த சீனுக்கும் ரிஹர்சல் தேவை!

பாலிவுட் நடிகை கல்கி கோச்லின், சண்டைக் காட்சிகளுக்கு ரிஹர்சல் செய்வது போல, அந்தரங்க காட்சிகள் எடுக்கும் முன்னதாக ஏன் ரிஹர்சல் செய்யக் கூடாது என அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சண்டைக் காட்சியின் போது ஹீரோவின் முகத்தில் அடி விழுந்து விடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரிஹர்சல் பார்க்கின்றனர். அதே போல, படுக்கையறை காட்சிகளில் நடிப்பதற்கு முன்னர், அந்த இரு நடிகர்களுக்கும் புரிதல் ஏற்பட ரிஹர்சல் ஏன் செய்யக் கூடாது என கேள்வி எழுப்பி பாலிவுட்டை அதிர வைத்துள்ளார்.

பாலிவுட்டில் காஸ்டிங் கவுச் எனப்படும் விசயத்தால் தான் மீ டூ எனும் பெரிய சர்ச்சையே வெடித்தது. இந்நிலையில், கல்கி கோச்சலின் இந்த புதிய யோசனை, பலரையும் அச்சப்பட வைத்துள்ளது. ஆனால், தனது நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ள கல்கி, இதுபோன்று அதிகாரப்பூர்வமாக செய்தால், மீ டூ போன்ற பிரச்சனைகள் ஏற்படாது என ஐடியாவும் கொடுத்துள்ளார்.

More News >>