சிவாஜி பேரனை மணந்தார் சுஜா வருணி!

நடிகை சுஜா வருணிக்கும் சிவாஜியின் பேரன் சிவகுமாருக்கும் சென்னையில் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

குத்தாட்ட நடிகையாக வலம் வந்த சுஜா வருணிக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போயின. விஜய் டிவியில் ஒளிபரப்பான முதல் பிக்பாஸ் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக களமிறங்கிய சுஜா வருணி, பலரது கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில், சுஜா வருணி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனை மணக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. கமல் தலைமையில் தனது திருமணம் நடைபெறும் என சுஜா வருணி தெரிவித்திருந்தார்.

இருவருக்கும் நேற்று சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து, சென்னையில் உள்ள கிரவுன் பிளாசாவில் சுஜா வருணி – சிவகுமார் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

ஆனால், கமல் இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாக வெளியான புகைப்படங்களின் மூலம் தெரியவில்லை. கமலுக்கு பதில் நடிகை ஸ்ரீ பிரியா திருமணத்தில் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தியதாக தெரிகிறது.

இந்த புதுமண தம்பதியினரை தமிழ் சினிமா உலகம் மற்றும் பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.

More News >>