கஜா புயல் சேதங்கள்- புதுக்கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிட திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு ஹெலிகாப்டரில் சென்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

நாகை, வேதாரண்யம் இரையே அதிதீவிர புயலாக கரையைக் கடந்தது கஜா புயல். இப்புயலால் தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் கடும் சேதத்தை எதிர்கொண்டுள்ளன. இப்புயலின் கோரதாண்டவத்துக்கு 50 பேர் பலியாகி உள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் வாழ்வாதாரங்கள் முற்றிலும் நாசமடைந்து மக்கள் தத்தளித்து வருகின்றனர். இந்த நிலையில் புயல் பாதிப்புக்கான நிவாரண விவரங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கஜா புயல் சேதங்களை பார்வ்வையிட சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 5.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி சென்றடைந்தார். திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு சென்று சேத பகுதிகளை பார்வையிடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்க இருக்கிறார்.

 

 

More News >>