சத்தீஸ்கரில் 2-ம் கட்ட தேர்தல்- வாக்குப் பதிவு தொடங்கியது!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2-வது மற்றும் இறுதி கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

சத்தீஸ்கரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள 18 தொகுதிகளில் கடந்த 12-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

எஞ்சிய 72 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தைத் தக்க வைத்துக் கொள்ள பாஜக மும்முரம் காட்டி வருகிறது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாக தாக்கி பிரசாரம் செய்தார்.

சத்தீஸ்கரில் காங்கிரஸின் முகமாக இருந்த முன்னாள் முதல்வர் அஜித் ஜோதி, ஜனதா காங்கிரஸ் எனும் கட்சியை தொடங்கி பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். அதேநேரத்தில் சத்தீஸ்கரில் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸும் முனைப்பு காட்டி வருகிறது.

முதல் கட்ட வாக்குப் பதிவின் போது மாவோயிஸ்டுகள் சில இடங்களில் தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

More News >>