தோனிக்கு இப்போ 20 வயசு இல்லை: கபில் தேவ்!

தோனிக்கு 20வயதில் விளையாடியது போல தற்போது விளையாடவேண்டும் என எதிர்பார்ப்பது தவறு என முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

மகேந்திர சிங் தோனி, இந்தியாவிற்கு டி20 உலக கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பையை பெற்று தந்த சாதனை வீரர், அவர் அணியில் இருப்பது நமது இந்திய அணிக்கு தான் பலம். கிரிக்கெட் மீதான புரிதல் மற்றும் அனுபவம் அவருக்கு அதிகமாக உள்ளது. டி20 போட்டிகளில் இருந்து தோனியை நீக்கியது மிகப் பெரிய தவறு.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பையிலும் தோனியின் பங்கு நிச்சயம் நாட்டிற்கு தேவை. அவருக்கு தற்போது 20 வயது இல்லை. அவர் 20 வயது இளைஞர் போல ஆடவேண்டும் என எதிர்பார்ப்பது மிகப் பெரிய தவறு. தோனியின் சாதூர்யம் மற்றும் அனுபவம் இந்தியா அடுத்த உலக கோப்பையை வெல்ல நிச்சயம் கை கொடுக்கும் என இந்தியாவிற்கு முதல் உலக கோப்பையை வாங்கி தந்த கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

More News >>