ரஜினி முதல்வராக 6% கமல்- 5% பேர் மட்டும் ஆதரவு- தந்தி டிவி சர்வே

அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துவிட்டு தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் நடிகர் ரஜினிகாந்த் முதல்வராவதற்கு 6% மட்டுமே ஆதரவு என தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. அதேநேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக 48% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவியில் இப்போது தேர்தல் நடைபெற்றால் என்பது முன்வைத்து கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் யார் முதல்வராக வர வேண்டும் என நினைக்கிறீர்கள் என்கிற கேள்வியும் கேட்கப்பட்டிருந்தது.

இதில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு 48% பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். 2-வதாக ஈபிஎஸ்-ஓபிஎஸ்-க்கு 20% பேரும் தினகரனுக்கு 9% பேரும் ஆதரவு தந்துள்ளனர்.

நடிகர்கள் ரஜினிகாந்த் 6%; கமல்ஹாசன் 5%; அன்புமணி 5% பேர் முதல்வராக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

More News >>