கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிப் போன ரஜினியின் செல்வாக்கு!

நடிகர் ரஜினிகாந்த் முதிர்ச்சியற்ற கருத்துகளை தெரிவித்து வருவதால் அவரது செல்வாக்கு மளமளவென சரிந்து போய் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது தந்தி டிவி கருத்து கணிப்பு.

யார் முதல்வராக வேண்டும் என நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியுடன் தந்தி டிவி கருத்து கணிப்பு நடத்தியது. இதில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு 48% பேர் ஆதரவு அளித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் முதல்வராக வேண்டும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15% பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த ஆண்டு ஜூலை மாதம் 6% பேர்; நவம்பர் மாதம் 6% மட்டுமே ரஜினிகாந்த் முதல்வராக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 13 பேர் பலியான போது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையானது. அண்மையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கால் நூற்றாண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர் விடுதலை குறித்த கேள்விக்கு யார் அந்த 7 பேர் என கேள்வி கேட்டு சர்ச்சையில் சிக்கினார்.

பின்னர் ரஜினிகாந்த் அளித்த விளக்கமும் சர்ச்சையாகிப் போனது. இதனால் தொடர்ந்து ரஜினிகாந்தின் செல்வாக்கு சரிந்து கொண்டு வருகிறது. இதைத்தான் தந்தி டிவியின் கருத்து கணிப்பும் வெளிப்படுத்தியிருக்கிறது.

 

More News >>