கஜா புயல் நிவாரணம்- பிரதமருடன் நாளை மறுநாள் சந்திப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
கஜா புயல் நிவாரண நிதி தொடர்பாக பிரதமர் மோடியை வரும் 22-ல் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் கஜா புயல் சேதங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் இன்று ஆய்வு செய்தனர். அப்போது கஜா புயலால் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
மேலும் 36 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடும் சேதமடைந்துள்ளது. இம்மாவட்டங்கள் விழுந்துள்ள ஏராளமான மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அனைவருக்கும் நிவாரண உதவி வழங்கப்படும். யாரும் விடுபட்டுவிட மாட்டார்கள். புதுக்கோட்டை நகரில் நாளை மாலைக்குள் மின்சாரம் வழங்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களுக்கு 5 நாட்களுக்குள் மின்சாரம் வழங்கப்படும். புயல் நிவாரண நிதி தொடர்பாக பிரதமர் மோடியை வரும் 22-ல் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அந்த நாளில் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.