மகாராஷ்டிரா புல்கான் ராணுவ தளத்தில் வெடிவிபத்து- 4 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் புல்கான் ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் வார்த்தா அருகே புல்கானில் ராணுவ தளம் அமைந்துள்ளது. இங்கு இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

More News >>