கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக வெளியாகும் அடங்கமறு!

ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிக் டிக் டிக் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அறிமுக இயக்குநரான கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் அடங்கமறு படம் வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

அடங்கமறு படம் தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் டிசம்பர் 21ஆம் தேதி படத்தை வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போகன் படத்திற்கு பிறகு இந்த படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் டீஸர், டிரெய்லர்கள் மற்றும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

More News >>