டெங்கு ஜூரத்திலிருந்து உயிர் தப்பிய ஸ்ரத்தா கபூர்!
பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர், கடந்த ஒரு மாதங்களாக டெங்கு காய்ச்சலில் அவதி பட்டு வந்த நிலையில், தற்போது குணமடைந்துள்ளார்.
ஆஷிக் 2 படம் மூலம் இந்திய ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரத்தா கபூர். தற்போது, பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகி வரும் சாஹோ படத்தின் நாயகியும் இவர் தான். இவருக்கு கடந்த மாதம் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரத்த பரிசோதனை செய்ததில், இவருக்கு டெங்கு ஜூரம் பரவி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து சிகிச்சை அளித்து வந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த நடிகை ஸ்ரத்தா கபூர், பூரண நலம் பெற வேண்டி அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.
இந்நிலையில், தற்போது டெங்குவில் இருந்து பரிபூரணமாக ஸ்ரத்தா குணாமாகியுள்ளதாகவும், இரண்டு வார ஓய்வுக்குப் பின்னர், மீண்டும் சாஹோ படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.