அயோக்யா ஃபர்ஸ்ட் லுக்கில் மதுபாட்டிலுடன் விஷால்!
விஷாலின் அயோக்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகியுள்ளது. அதில், விஷால் மதுபாட்டிலுடன் இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்று பெரிய சர்ச்சையை கிளப்பியது. பின்னர், படக்குழு அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நீக்கினர்.
இந்நிலையில், சர்ச்சை ஏற்பட்டு வைரலாக வேண்டும் என்ற நோக்கில், விஷாலின் அயோக்யா ஃபர்ஸ்ட் லுக்கில் மது பாட்டிலுடன் விஷால் காட்சி தருகிறார்.
வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் அயோக்யா படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். சர்கார் பட ஸ்டண்ட் இயக்குநர்களான ராம் – லக்ஷ்மண் தான் இந்த படத்திற்கும் சண்டை காட்சிகளை அமைத்துள்ளனர்.
போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள விஷாலின் அயோக்யா படம் ஜனவரி 2019 ரிலீஸ் ஆகிறது.