கஜா புயல்- 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் ரூ40 லட்சம் நிதி உதவி
கஜா புயல் பாதித்த 7 மாவட்ட மக்களுக்கு ரூ40 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
கஜா புயலில் வாழ்வாதாரத்தை தொலைத்து மக்கள் நிர்கதியாக நிற்கின்றனர். அரசு தரப்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திரை உலகைச் சேர்ந்த சிவகுமார் குடும்பம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் நிதி உதவி அறிவித்துள்ளனர். தற்போது நடிகர் விஜயும் நிதி உதவி வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.
கஜா புயலால் அதிகம் பாதித்த மாவட்டங்களில் தலா ரூ4.50 லட்சமும் குறைவாக பாதித்த மாவட்டங்களில் தலா ரூ2 லட்சமும் தமது மக்கள் இயக்கத்தின் மூலம் வழங்கப்படும் என விஜய் தெரிவித்துள்ளார். மொத்தம் ரூ40 லட்சம் தொகை மாவட்ட நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.