கஜா புயல்- ரஜினிகாந்த் ரூ50 லட்சம் வைரமுத்து ரூ5 லட்சம் நிதி உதவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ50 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் தமது ரசிகர் மன்றங்கள் மூலம் மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
கஜா புயலால் 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பினரும் நிதி உதவியை வழங்கினர்.
திரை உலகத்தினரும் நிதி உதவியை அறிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் ரூ50 லட்சம் நிதி உதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தமது ரசிகர் மன்றங்கள் மூலமாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதேபோல் கவிஞர் வைரமுத்து ரூ5 லட்சம் நிதி உதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.