குழந்தைகளுக்கு பிடித்த மசாலா வெஜ் பாஸ்தா !

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய மசாலா வெஜ் பாஸ்தா ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பாஸ்தா - 1 கப் வெங்காயம் - 1பச்சை மிளகாய் - 2பூண்டு பற்கள் - 2மஞ்சள் தூள் - 1சிட்டிகை ரெட் சில்லி சாஸ் - 1/2 டீஸ்பூன் சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன் வினிகர் - 1/2 டீஸ்பூன் பாஸ்தா சாஸ் - 1/2 கப் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்துருவிய சீஸ் சிறிதளவு

நீளவாக்கில் நறுக்கிய பீன்ஸ், கேரட், பச்சை குடை மிளகாய்,சிகப்பு குடை மிளகாய் மற்றும் பச்சை பட்டாணி - 1கப்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் நீர் ஊற்றி அதில் 1/4 டீஸ்பூன் எண்ணெய், கொஞ்சமாக உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்கவிட்டு பின் பாஸ்தாவை சேர்த்து 10 நிமிடம் நன்றாக வேக விட்டு இறக்கி நீரை வடித்து விட்டு குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பூண்டை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய் இவற்றையும் நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு வதக்கி பின் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், காய்கறிகள் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்றாக வதக்கி அதில் மஞ்சள் தூள், ரெட்சில்லி சாஸ், சோயா சாஸ், வினிகர் சேர்த்து கலந்து 2 நிமிடம் மூடி போட்டு வேக விட்டு முன்பே வேகவைத்து எடுத்து வைத்துள்ள பாஸ்தா மற்றும் பாஸ்தா சாஸையும் சேர்த்து நன்றாக கலந்து மீண்டும் 2 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி சூடாக பரிமாறவும்.

சூப்பர் சுவையில் மசாலா வெஜ் பாஸ்தா சுவைக்க தயார். குழந்தைகளுக்கு மேலே சிறிதளவு துருவிய சீஸை தூவி கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

More News >>