சர்ச்சையை கிளப்பிய ஷகீலா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
அடல்ட் ஒன்லி படங்களில் நடித்து பிரபலமான ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தென்னிந்தியாவை தனது ஆபாச படங்களால் கலக்கியவர் ஷகீலா, அவரது பயோபிக்கும் தற்போது படமாக்கப்பட்டுள்ளது. ‘ஷகீலா – Not a Porn Star’ என்ற தலைப்பில் அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. இதில், ஷகீலாவாக பாலிவுட் நடிகை ரிச்சா ஷத்தா நடிக்கிறார்.
இந்த ஃபர்ஸ்ட் லுக் சர்ச்சையாக காரணம் என்னவென்றால், ஃபர்ஸ்ட்லுக்கில் ஆடை ஏதும் இன்றி, ரிச்சா வெறும் நகைகளை அணிந்து போஸ் கொடுத்தது மட்டும் இல்லை. ’த்தா’ என்ற ஆபாச வார்த்தை இடம் பெற்றிப்பதாலே இந்த ஃபர்ஸ்ட் லுக் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இப்போதெல்லாம் ஃபர்ஸ்ட் லுக்கில் சர்ச்சையை கிளப்பினால் அது படத்திற்கு நல்ல பப்ளிசிட்டியாக அமைவதால், இயக்குநர்களும் இதையே பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.