ஒடிசாவில் பயங்கர விபத்து: பேருந்து கவிழ்ந்து 12 பேர் பலி
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம், கட்டக் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. நேற்றிரவு ஜகத்பூர் அருகே உள்ள மஹாநதி ஆற்றுப்பாலம் வழியாக சென்றபோது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. படுகாயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று தெரிகிறது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.