சென்னையில் சிக்கியது நாய்கறியா? ஆட்டுக்கறியா? தொடரும் வால் சர்ச்சை

சென்னையில் 1,000 கிலோ நாய்கறி சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்த கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை இன்னமும் ஓயவில்லை.

சென்னையில் 1,000 கிலோ நாய்கறி சிக்கியதாகவும் சென்னை பிரியாணி கடைகளில் நாய்கறி கலந்து விற்பனை செய்யப்படுவதாகவும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சென்னைவாசிகள் பீதியடைந்தனர்.

சமூக வலைதளங்களிலும் நாய்கறி தொடர்பான மீம்ஸ்கள் கொடிகட்டி பறந்து வருகின்றன. ஆனால் இறைச்சி கடை உரிமையாளர்களோ, வெளிமாநில ஆட்டு கறியைத்தான் நாய்கறி என அதிகாரிகள் தவறாக தெரிவித்துவிட்டனர் என அடித்து கூறி வந்தனர்.

இவ்வளவு பெரிய சர்ச்சைக்கு காரணமே ‘வால்’தான் என கூறப்படுகிறது. அதாவது தென் மாநில ஆடுகளின் வால் குட்டையாக இருக்கும். ஆனால் வடமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆடுகளின் வால் நீளமானதாக இருக்கிறது.

இந்த வாலை வைத்துதான் பிடிபட்டது நாய்கறி என அதிகாரிகள் வதந்தி பரப்பிவிட்டனர் என்பது இறைச்சி கடை உரிமையாளர்களின் குற்றச்சாட்டு. இதனால் இறைச்சி கொண்டுவரப்பட்ட ஜோத்பூரில் விசாரணை நடத்த போலீசார் சென்றிருக்கின்றனர்.

வாலால் வளர்ந்த சர்ச்சை எப்போது முடியுமோ?

More News >>