திரைப்பட இயக்குனர் கௌதமன் தந்தை மரணம்: மு.க.ஸ்டாலின் இரங்கல்
திரைப்பட இயக்குனர் வ.கௌதமனின் தந்தை மரணமடைந்ததை அடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
திரைப்பட இயக்குனர் வ.கௌதமனின் தந்தை வடமலை கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால், அவர் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கௌதமனின் தந்தை வடமலை இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில், திரைப்பட இயக்குநர் திரு வ.கௌதமன் அவர்களின் தந்தை திரு வடமலை அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மறைவு எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, தந்தையை இழந்து வாடும் திரு கெளதமனுக்கும் அவரது உறவினர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்சமுதாய ஏற்றத் தாழ்வுகளை அறவே நீக்கிடும் வகையில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக கடுமையாகவும், உறுதியாகவும் போராடிய அவரின் மறைவு சமத்துவ போராளிகளுக்கு பேரிழப்பாகும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.