ஐயப்பனாக நடிக்கும் பிருத்விராஜ்!
சபரிமலை பிரச்சனை நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், நடிகர் பிருத்விராஜ் ஐயப்பனாக நடிக்கவுள்ளார்.
பிரபல மலையாள எழுத்தாளரும் கதாசிரியருமான சங்கர் ராமகிருஷ்ணன் என்பவர் ஐயப்பன் எனும் தலைப்பிலேயே இந்த படத்தை இயக்குகிறார். அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்த படத்தில் ஐயப்பனை கடவுளாக சித்தரிக்காமல் பந்தளத்தில் வாழ்ந்த சாதரண மனிதனாக, இளவரசனாக, ஒரு போர் வீரனாக, ஒரு புரட்சியாளனாக வாழ்ந்த கதையைத்தான் இந்தப் படத்தில் சொல்லப் போகிறார்களாம்.
இந்த படத்தை பயங்கர பொருட்செலவில் ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சபரிமலை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படம் பெரும் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.