பிராந்தி வாசம்... பலவந்த முத்தம்... ஒரே உதை -நடிகை கஸ்தூரி பகீர் தகவல்
தாம் திரைத்துறைக்கு வந்த போது பிராந்தி வாசத்துடன் பலவந்தமாக இருட்டில் நடிகர் ஒருவர் முத்தம் கொடுத்ததாக நடிகை கஸ்தூரி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் மீடு பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்தியாவிலும் பத்திரிகை துறை, திரைத்துறை என அனைத்து துறைகளிலும் மீடு புயல் உக்கிரமாக வீசி வருகிறது.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி குமுதம் ஏட்டுக்கு அளித்த பேட்டியில் பல பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், நான் சினி இண்டஸ்ட்ரிக்கு வந்த புதுசுல நடிகர் ஒருத்தர் இருட்டுல பலவந்தமா முத்தமிட்டார். ஒரு உதை விட்டுட்டு வெளிய வந்துட்டேன்.
பிராந்தி வாசம் வாயிலேயே இருக்கிற மாதிரி இருந்தது ரொம்ப நாளைக்கு. அந்த பாவத்துக்கோ என்னமோ அவர் இழுத்துக்கோ பறிச்சுக்கோனு இருக்கார் இப்போ. 2-வது படத்துல வற்புறுத்தலுக்கு நான் இணங்கலன்னு என்னை படத்தை விட்டு தூக்கினார் ஒரு இயக்குநர். அந்த பாவம் தானோ என்னவோ அவரை விட்டு அவர் மனைவி ஓடிப் போயிட்டாங்க
தமிழகத்துல பெரிய தொழிலதிபர் ஒருத்தர் வற்புறுத்தினார். பத்திரிகையாளர் ஒருத்தர்தான் இதுக்கு தூது. அம்மா அப்பாவுக்கு பாடம்லாம் எடுப்பாங்க. இணங்கினா என்னலாம் நல்லது, இணங்கலன்னா என்னலாம் ஆகும்னு எல்லாம் மிரட்டினாங்க. அம்மா லாயர்ங்கிறதால இதெல்லாம் சமாளிச்சாங்க. அப்பா வயசு உங்களுக்கு அப்படின்னு சொன்னோம்.
சமீபத்துல நிவின்பாலி, அமலாபால் நடிச்ச படம் ஒண்ணுல நடிக்க கமிட் ஆகியிருந்தேன். மலையாள இண்டஸ்ட்ரில சமத்துவம் ரொம்ப அதிகம். ப்ரொடக்ஷன் மேனேஜர்ல இருந்து டைரக்டர் வரை எல்லோரும் விதம் விதமாக தொந்தரவு பண்ணுவாங்க. எதுக்கு இந்த டென்ஷன்னு படமே வேண்டாம்னு விட்டுட்டேன் என கூறியுள்ளார் நடிகை கஸ்தூரி.