தமிழில் மிரட்ட வருகிறது தி கேர்ள் இன் தி ஸ்பைடர் வெப்!
தி கேர்ள் வித் தி டிராகன் டாட்டூ படத்தின் இரண்டாம் பாகமான தி கேர்ள் இன் தி ஸ்பைடர் வெப் வரும் நவம்பர் 23ம் தேதி தமிழில் வெளிவருகிறது.
கொலாம்பியா பிக்சர்ஸ், மெட்ரோ கோல்டன் மேயர் உள்பட 7 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் தி கேர்ள் இன் தி ஸ்பைடர் வெப் படத்தை டோன்ட் ப்ரீதி எனும் உலகப் புகழ் பெற்ற திரைப்படத்தை இயக்கிய பெட் அல்வரேஸ் இயக்கியுள்ளார்.
கேர்ள் இன் தி ஸ்பைடர் வெப் என்ற நாவலை தழுவி அதே பெயரில் இந்த படம் இயக்கப்பட்டுள்ளது. மிகச் சிறந்த டெக்னாலஜி திறன் கொண்ட கிளயர் போய் மற்றும் மைக்கேல் ப்ளாம்விஸ்ட்டுடன் இணைந்து நாட்டில் நடக்கும் பல ஊழல்களை அம்பலம்படுத்த நினைக்கின்றனர். ஊழல்வாதிகளின் சதி வலைகளில் சிக்கித் தவிக்கும் இவர்கள் அதிலிருந்து மீண்டு எப்படி அவர்களை பிடிக்கின்றனர் என்பதே படத்தின் கதை.
நவம்பர் 23ம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படம், தமிழிலும் ரிலீசாகிறது.