கமகமக்கும் மீன் குழம்பு ரெசிபி!

அசைவ பிரியர்களுக்கு பிடித்த கமகமக்கும் மீன் குழம்பு எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..

தேவையான பொருட்கள் :

மீன் - 5 துண்டுகள் தக்காளிப் பழம் - 1 சிறியது நறுக்கிய வெங்காயம் - 3/4 கப்பச்சை மிளகாய் - 2நறுக்கிய பூண்டு - 1 பூடு இஞ்சி பூண்டு விழுது - 1 மே.கரண்டி புளிக் கரைசல் - 1/4 கப்கடுகு - 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டிவெந்தயம் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் - 3 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 4-5 மேசைக்கரண்டி தேங்காய் பால் - 1 கப் கறிவேப்பிலை - 2 நெட்டு சீரகம்,மிளகு,பூண்டு அரைத்து - 1 மே.கரண்டி தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

மீனை சுத்தம் செய்து கழுவி, மஞ்சள் தூள், சிறிது உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிரட்டி வைத்து கொள்ளவும்.

அடுப்பில் சட்டியை வைத்து, சூடானதும் கடுகு, சீரகம்,வெந்தயம் போட்டு சிறிது பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் பூண்டு, கறிவேப்பிலை, தக்காளிப்பழம் சேர்த்து 2-3 நிமிடங்கள் வரை வதக்கவும்.

வதங்கியதும் பிரட்டி வைத்திருந்த மீனை அதனுள் போட்டு, ஒரு பக்கம் பொரிந்ததும் மெதுவாக மறு பக்கம் திருப்பி பொரிந்து வர, தண்ணீரை ஊற்றி மூடி வைக்கவும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், அதற்குள் மிளகாய் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.3-4 நிமிடங்கள் கொதித்ததும், புளிக் கரைசலையும் சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.

குழம்பு நன்றாக வற்றித் தடித்து வரத் தேங்காய் பால், அரைத்து வைத்துள்ள சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து மூடிக் கொதிக்க வைக்கவும். (மெல்லிய சூட்டில்). 1-2 நிமிடம் கழித்து இறக்கி, சாதத்துடன் பரிமாறவும்.

அவ்ளோதாங்க சுவையான கமகமக்கும் மீன் குழம்பு ரெடி!

More News >>