போலிஸ் ஸ்டேஷனுக்கும் காவி பெயிண்ட்! - பாஜக நடவடிக்கை

உத்தரபிரதேச மாநிலத்தில் காவல் நிலையத்திற்கும் காவி நிறம் பூசப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் உள்ளார். யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அரசு கட்டிடங்கள் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றன.

அரசு சம்பந்தப்பட்ட சிறு கையேடுகள், பள்ளிக்கூட பைகள், மேல் துண்டுகள், நாற்காலிகள், பேருந்துகள் ஆகியவை இவற்றில் அடங்கும். சமீபத்தில் ஹஜ் அலுவலகத்துக்கு காவி நிறம் பூசப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து மீண்டும் வெள்ளை நிறம் பூசப்பட்டது.

இந்த நிலையில், தலைநகர் லக்னோவின் கைசர் பாக் பகுதியில் உள்ளகாவல் நிலையத்துக்கும் தற்போது காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது. இது மற்ற காவல் நிலையங்களைப் போலவே சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருந்து வந்தது.

தற்போது காவல் நிலையக் கட்டடத்தின் சில பகுதிகளும் சில தூண்களும் இளம் காவி நிறத்துக்கு மாறியுள்ளன.

80ஆண்டுகால பழைமையான இந்த காவல் நிலையத்திற்கு, இரண்டரை மாதங்களுக்கு முன் தொடங்கிய புதுப்பிக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளன என்று காவல் ஆய்வாளர் கூறியுள்ளார்.

மேலும், பாஜக மக்களைத் திசை திருப்புவதற்காகவே அவர்கள் காவி நிற அரசியலில் ஈடுபட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

More News >>