சரித்திரமான விஜய்சேதுபதி அசத்தும் சீதக்காதி டிரைலர்!
ப்பா… எப்படிடா இந்த மனுஷன் இப்படி நடிக்கிறாரே என வாயை பிளக்கும் அளவுக்கு சீதக்காதி டிரைலர் மெய்சிலிர்க்க வைக்கிறது. டிரைலரை முதலில் பார்த்து விட்டு செய்தியை படியுங்கள்.
இந்த டிரைலரை பார்த்தாலே பல பேர் படத்திற்கான விமர்சனத்தை சொல்லிவிடுவார்கள். அட்லீஸ்ட் விஜய்சேதுபதியின் புகழ் துதி பாட ஆரம்பித்து விடுவர். அவை அத்தனைக்கும் கண்டிப்பாக டிரைலர் ஒர்த்தாகத்தான் இருக்கிறது.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற காமெடி படத்தை கொடுத்த பாலாஜி தரணிதரணா இப்படி ஒரு காவியத்தை இயக்கியுள்ளார் என டிரைலரை பார்க்கும் அனைவரும் எண்ண தோன்றும்.
ஃபர்ஸ்ட் லுக்கிலேயே இது வேற மாதிரியான படம் என காட்டிய பாலஜி தரணி தரண் டிரைலரில் படத்தின் எதிர்பார்ப்பை 100 மடங்கு எகிற வைத்து விட்டார். டிசம்பர் 20ம் தேதிக்காக திரையுலகினர் பலரும் காத்திருப்பர்.
செக்கச்சிவந்த வானம், 96 படங்களை தொடர்ந்து வேறு ஒரு வாழ்க்கையை அய்யாவாக விஜய்சேதுபதி நமக்கு பரிசளிக்க போகிறார். டிரைலரின் கடைசி வசனம் நானே சரித்திரமானேன் என விஜய்சேதுபதி சொல்வது போலவே அவர் நிச்சயம் திரையுலகினர் படிக்கும் நடிப்பு சரித்திரமாகவே மாறி விட்டார் என்று தான் தோன்றுகிறது. அது தான் நிதர்சனமும் கூட.
டிரைலரை பார்த்து விடுங்கள்.. டிசம்பர் 21ல் அய்யாவை தியேட்டரில் போய் பாருங்கள்!