சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இது தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் எதிரொலியால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இது தொடர்ந்து வலுடைந்து வருவதால், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடுத்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.