ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் எம்.எல்.ஏக்கள்..திமுகவில் பரபர Exclusive

கஜா புயல் நிவாரண நிதியாக திமுக எம்.எல்.ஏக்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்கிற ஸ்டாலின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் இரு மடங்கு உயர்வாக அறிவிக்கப்பட்டது. தொடக்கத்தில் இதனை நாங்கள் ஏற்கப் போவதில்லை என திமுக எம்.எல்.ஏக்கள் கூறினர்.

பின்னர் இந்த சம்பள விவகாரத்தில் பின்வாங்கியது திமுக. தற்போது கஜா புயல் நிவாரண நிதியாக எம்.எல்.ஏக்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்கிற திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய திமுக எம்.எல்.ஏக்கள், எங்களது சம்பளத்தை வைத்துக் கொண்டுதான் கட்சிப் பணிகளையும் சேர்த்து செய்து வருகிறோம். திமுக அறக்கட்டளையில் பல நூறு கோடி ரூபாய் இருக்கிறது.

அதில் ரூ1 கோடி கொடுப்பதாக அறிவித்தும் விட்டீர்கள். இப்போது எங்களது சம்பளத்தை அரசாங்கத்திடம் இருந்து வாங்கி அரசாங்கத்திடமே கொடுப்பது என்பது எந்த வகையில் நியாயமானது?

7 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாத நிலையிலும் தொடரும் எங்களது கட்சிப் பணி என்னவாகும்? என பொங்குகின்றனர். இத்தகவல் அண்ணா அறிவாலயத்துக்கும் பாஸ் செய்யப்பட்டிருக்கிறதாம்.

- எழில் பிரதீபன்

More News >>