சர்வம் தாளமயம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராஜிவ் மேனன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்கியுள்ள சர்வம் தாளமயம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர், ஒளிப்பதிவாளர், விளம்பர பட இயக்குநர் என மூன்று துறைகளிலும் அசத்தி வரும் ராஜிவ் மேனன், தமிழில் இதுவரை இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். 1997ஆம் ஆண்டு வெளிவந்த இவரது மின்சார கனவு படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. பின்னர் அஜித், மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தபு நடிப்பில் 2001ல் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

அதன் பின்னர் இவர் தற்போது இயக்கியுள்ள சர்வம் தாளமயம் படம் வரும் டிசம்பர் 28ஆம் தேதி திரைக்கு வருகிறது.

மணிரத்னத்தின் பம்பாய், குரு, கடல் போன்ற படங்களின் ஒளிப்பதிவாளரும் ராஜிவ் மேனன் தான்.

மணிரத்னத்துக்கு எப்படி ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்த்தான இசையமைப்பாளரோ இவருக்கும் அப்படி தான். ஒரு இளைஞனின் இசைப் பயணம் பற்றிய இந்த படத்தில் பாடல்கள் மற்றும் இசைக்கு பெரிய இடம் உள்ளது. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தில் வேறு ஒரு ஜி.வி. பிரகாஷாக தெரிவார் என்பதை தைரியமாக எதிர்பார்க்கலாம்.

More News >>