5 ஏக்கர் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன: வேதனையில் விவசாயி தற்கொலை

கஜா புயல் பாதிப்பால் 5 ஏக்கர் பரப்பளவில் இருந்து தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்ததால் வேதனையில் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த சோழகன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். தென்னை விவசாயியான இவர், 5 ஏக்கர் பரப்பளவில் தென்னந்தோப்பு வைத்து பராமரித்து வந்தார்.

தன் சொந்த பிள்ளைகள் போல் வளர்த்து வந்த தென்னை மரங்கள் அனைத்தும் கஜா புயல் தாக்கத்தால் கடும் சேதத்தை சந்தித்தது. இதில், அனைத்து தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்தன.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட, விவசாயி சுந்தர்ராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

தனது 5 ஏக்கர் தென்னந்தோப்பினால் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் குடும்ப தேவைக்கு பூர்த்தி செய்து வந்ததாகவும், கஜா புயல் காரணத்தால் தென்னை மரங்கள் அனைத்தும் அடியோடு அழிந்ததாலும் சுந்தர்ராஜ் கடந்த 6 நாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சுந்தர்ராஜ் அவரது வீட்டின் அருகே உள்ள சுடுகாட்டிற்கு சென்று அங்கே விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம்ப அப்பகுதயில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு தென்னை மரத்துக்கு ரூ.600 மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த தொகை மிகவும் குறைவானதாக இருப்பதாக எண்ணியே சுந்தர்ராஜ் தற்கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

More News >>