சென்னை நாய்கறி பஞ்சாயத்து ஓவர்... ஓவர்.. ஆட்டிறைச்சியேதானாம்!

ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டது நாய்க்கறி அல்ல.. .செம்மறி ஆட்டுக்கறி என உறுதி செய்யப்பட்டிருப்பது பிரியாணி பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2,100 கிலோ இறைச்சி கடந்த 17-ந் தேதி பறிமுதல் செய்யப்பட்டது. இது ஆட்டிறைச்சி என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட நாய்க்கறி என தகவல் பரவியது.

அத்துடன் சென்னை பிரியாணி கடைகளில் நாய்கறி கலக்கப்படுவதாகவும் வதந்தி பரவியது. இது இறைச்சி விற்பனையாளர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும் ஜோத்பூருக்கு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தவும் சென்றுள்ளனர். இதனிடையெ சென்னை உயர்நீதிமன்றத்தில் கால்நடைகள் பாதுகாப்பு அமைப்பு ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.

அதில், கைப்பற்றப்பட்ட இறைச்சி குறித்து உணவுத்துறை அதிகாரிகள் அறிக்கை வெளியிடாதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் சிக்கியது நாய்கறி இல்லை.. ஆட்டிறைச்சிதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை பிரியாணி பிரியர்கள் ஹேப்பி அண்ணாச்சி

More News >>