கென்னடி கிளப்புக்கு சீனாவில் கிடைக்குமா சிகப்பு கம்பளம்!
சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள கென்னடி கிளப் படம் சீனாவில் ரிலீசாகிறது.
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுசீந்திரன் தற்போது பெண்கள் கபடியை மையமாக வைத்து கென்னடி கிளப் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சசிகுமார், சமுத்திரகனி, பாரதிராஜா, சூரி, முனிஷ்காந்த், புதுவரவு மீனாட்சி, காயத்ரி, நீது செளம்யா, ஸ்மிரிதி, செளந்தர்யா மற்றும் பலர் நடிக்கின்றனர். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
தங்கல், பாகுபலி, சீக்ரெட் சூப்பர்ஸ்டார் போன்ற படங்கள் சீனாவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நல்ல திரைக்கதை கொண்ட படங்களுக்கு சீன ரசிகர்கள் வரவேற்பு அளிப்பதால், கென்னடி கிளப் படத்தை சீனாவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இப்படத்தின் சீன டப்பிங் உரிமம் 2 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி படம் ரிலீசாக உள்ளது.