இந்தியாவுக்கு பாக்கு கொட்டைகளை கடத்தினார் இலங்கை மாஜி வீரர் ஜெயசூர்யா?
இந்தியாவுக்கு சட்டவிரோதமாக பாக்கு கொட்டைகளை கடத்தியதாக இலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
தெற்காசிய தடையற்ற வணிக ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையில் இருந்து பாக்கு கொட்டைகளை இறக்குமதி செய்தால் இந்தியாவில் வரி விதிப்பது கிடையாது. அதே நேரத்தில் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்தால் இந்தியாவில் 108% வரி விதிக்கப்படும்.
இதனால் இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு பாக்கு கொட்டைகள் கடத்தப்படுகின்றன. இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையில் ஜெயசூர்யாவும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நூதன வரி ஏய்ப்பு மோசடி குறித்து ஜெயசூர்யாவிடம் விசாரணை நடத்த வருவாய்ப் புலனாய்வு பிரிவினர் அவரை மும்பைக்கு அழைத்துள்ளனர்.