ஜி.வி. பிரகாஷின் ஜெயில் படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்!
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆல்பம், வெயில், அங்காடி தெரு, அரவாண், காவிய தலைவன் படங்களை இயக்கிய வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயில் படத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணிதி நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பிரத்யேக புகைப்படங்களை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. இந்த படமும் வடசென்னையை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது.
அரவாண், காவிய தலைவன் என்ற சிறந்த படைப்பை கொடுத்தாலும், அவை வெற்றி பெறாததால், மனமுடைந்துள்ள வசந்தபாலன் இந்த படத்தில் நிச்சயம் வெற்றி பெற வேண்டி கடின உழைப்பு போட்டு வருகிறார். திரைக்கதை நிச்சயம் ஜி.வி. பிரகாஷை நடிப்பில் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.