சவாலில் தோற்ற இலியானா மீண்டும் பாலிவுட்டுக்கு டிக்கெட் எடுத்தார்!
ரவிதேஜாவின் அமர் அக்பர் ஆண்டனி படத்தில் நாயகியாக நடித்த இலியானா, டோலிவுட்டில் மீண்டும் முதலிடத்தை பிடிப்பேன் என தான் விட்ட சவாலில் தோற்றுள்ளார்.
சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ரவிதேஜாவின் அமர் அக்பர் ஆண்டனி படத்தில் நடிப்பதற்காக பாலிவுட்டில் இருந்து டோலிவுட் வந்த நடிகை இலியானா, மீண்டும் டோலிவுட்டில் தான் விட்ட முதலிடத்தை பிடிப்பேன் என சவால் விடுத்தார்.
படம் கடந்த வாரம் வெளியான நிலையில், படுதோல்வி அடைய, தன்னுடைய சவாலில் தோற்றுள்ளார் இலியானா. இதனால், மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் தனது முயற்சியை கைவிட்டு பாலிவுட் திரும்புகிறார்.
அங்கும் அவருக்கு பெரிய பட வாய்ப்புகள் ஏதும் இல்லை. ஜான் ஆப்ரகாமின் பகல்பாண்டி படத்தில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.