கஜா புயல் நிவாரண உதவியை பெறுவதிலும் கூடவா ஜாதியின் கோரத்தாண்டவம்?

கஜா புயல் நிவாரண உதவியைப் பெறுவதிலும் ஜாதி கோரத்தாண்டவமாடுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் இதுதான்:

இப்புகைப்படம் தொடர்பாக இரு வேறு கருத்துகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த புகைப்படத்தை நியாயப்படுத்தும் வகையில் Suseela Anand தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

இந்த பேனரை நிறைய பேர் பகிர்த்திருப்பதைப் பார்க்கிறேன். புயல் பாதித்த பகுதிகளில் சாதி பாக்குறாங்களா என்றால் பாக்குறாங்க.

அதில் மாற்றுக் கருத்தில்லை.இதே விழுந்தமாவடியில் 10 குடும்பங்கள் வன்னியர். 380 குடும்பங்கள் SC. வருகின்ற நிவாரணப் பொருட்களை யாருக்கு தருவது தரக்கூடாது என்பதை அந்த 10 குடும்பத்தினர் தான் முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

நேற்று நாங்கள் சென்று வந்த அரை மணி நேரத்தில் மிகப் பெரிய அடிதடியாகி இன்று இந்தப் பகுதிக்கு கலெக்டர் வந்து போயிருக்கிறார்.

ஆனால் பகிரப்பட்டிருக்கும் இந்த பேனர் அரசு வைத்ததல்ல. அது மக்களே எழுதி வைத்தது. அரசு எங்கும் எந்த பேனரும் வைக்கவில்லை. உதவிப் பொருட்கள் வழங்க வருபவர்களுக்கு உள்ளுக்குள் இருக்கும் தங்கள் கிராமங்களை கவனப்படுத்த மக்களே எழுதி வைத்தது. தகவலுக்காக!!

பத்திரிகையாளர் பாரதி தம்பியோ, நாங்களும் இந்த ஊருக்கு சென்றோம். இது மக்களே கட்டிய அறிவிப்புத் துணி. அரசோ, வேறு வெளி ஆட்களோ வைத்ததல்ல.. என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

ஆனால் A Sivakumar தமது ஃபேஸ்புக் பக்கத்தில், ராஜஸ்தானிலிருந்து நாய்க்கறி வந்தது என்பதற்கும் இந்த புகைப்படத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தாமரைபுலம் எங்கிருக்கு? விழுந்தமாவடி எங்கிருக்கு? ஏன்யா தெரியாம பரப்பிக்கிட்டு இருக்கீங்க? ஏற்கனவே குத்துயிரும் கொலை உயிருமா இருக்கிறவங்களை கொலை பண்ணாதீங்கப்பா. எதுவந்தாலும் நம்பிடாதீங்க? பொங்கல் பொறுமையா எப்போ வேணும்னாலும் வைக்கலாம். என குறிப்பிட்டிருக்கிறார்.

 

 

More News >>