மொறு மொறு சிக்கன் பிரை ரெசிபி !

மொறு மொறுப்பான மற்றும் சுவையான சிக்கன் பிரை எப்படி செய்றதுன்னு பார்ப்போம்..

தேவையான பொருட்கள்:

சிக்கன் -1 கிலோபெரிய வெங்காயம் -4 ( பொடியாக நறுக்கியது)பச்சை மிளகாய் -6 ( பொடியாக நறுக்கியது)இஞ்சி-பூண்டு விழுது - 4 மேஜைக்கரண்டிவரமிளகாய் தூள் - 6 தேக்கரண்டிமஞ்சள்தூள் - 1 தேக்கரண்டிகொத்தமல்லி தூள் - 3 தேக்கரண்டிகரம்மசாலா தூள் -2 தேக்கரண்டிதயிர் -150 கிராம்கறிவேப்பிலை - 6 கொத்துபொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் - 1/2 கப்மரசெக்கு கடலெண்ணய் - 300 மில்லிபசு நெய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு

செய்முறை:

நன்றாக சுத்தம் செய்த சிக்கனில் தயிர் , 3 மேஜைக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள் 3 தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி மற்றும் 2 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக பிசிறி கொள்ளவும்.

இந்த பிரட்டலை 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

இப்பொழுது வடைச்சட்டியில் கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

பிறகு அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அதில் அனைத்து பொடிகளையும் சேர்த்து நன்றாக நன்றாக வதக்கவும்.

பிறகு ஊறவைத்தள்ள சிக்கனை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இப்பொழுது தேவையான அளவிலான உப்பு சேர்க்கவும்.

கவனம் தேவை சிறிது தண்ணீர் கூட சேர்க்க கூடாது. சிறுதீயிலே தான் வதக்க வேண்டும். குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் வேக விடவும். இப்பொழுது பசு நெய்யை சுற்றி ஊற்றவும்.

சிறுதீயிலே 5 நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும். அவ்ளோதாங்க சுவையான, மொறு மொறுப்பான சிக்கன் பிரை ரெசிபி ரெடி.

More News >>