விஸ்வாசம் படத்தை விளம்பரம் செய்யாதீர்கள்- அஜித் ஆர்டர்!
கஜா புயலால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில், படத்திற்கான எந்த புரமோஷனையும் செய்யாதீர்கள் என அஜித் கட்டளையிட்டுள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 58வது படமான விஸ்வாசம், வரும் பொங்கலுக்கு ரிலீசாகிறது. வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து 4வது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாரா அஜித்துக்கு ஜோடியாக மூன்றாவது முறையாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இந்த படத்தின் டீஸர், டிரைலர், சிங்கிள் டிராக் ரிலீஸ் போன்ற எந்த ஒரு புரோமோஷனிலும் படக்குழு ஈடுபட வேண்டாம் என அஜித் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கஜா புயலால் தமிழகத்தின் 12 மாவட்ட மக்கள் பாதித்துள்ள நிலையில், எந்த கொண்டாட்டமும் வேண்டாம் எனவும் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை படத்திற்கான எந்த விளம்பரமும் வேண்டாம் எனவும் அஜித் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படத்துடன் போட்டிக்கு வருவது குறிப்பிடத்தக்கது.