சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு- நவ.26 வரை தொடரும்!
சபரிமலையில் அமல்படுத்தப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தடை நவம்பர் 26 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பெண்களையும் அனுமதிக்கலாம் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை. இத்தீர்ப்புக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.
ஆனால் கேரளா அரசோ, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவோம் என்பதில் உறுதியாக இருக்கிறது. இதனால் சபரிமலையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
தற்போது ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பதற்றத்தால் கூட்டம் குறைவாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் சபரிமலை பகுதியில் அமல்படுத்தப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று முடிவுக்கு வந்தது. ஆனால் நவம்பர் 26-ந் தேதி வரை இந்த தடை நீட்டிக்கும் என பத்தணம்திட்டா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.