வைரமுத்துவின் மகன் எழுதிய பாடலை பாடிய சின்மயி!
மீ டூ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்கான புகார்களை கூறிய சின்மயி, தற்போது அவரது மகன் கபிலன் வைரமுத்து எழுதிய பாடலை பாடியுள்ளார். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் மற்றும் தமிழில் நடிகையர் திலகம் நோட்டா படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு ரசிகைகளின் மனதை கவர்ந்த விஜய் தேவரகொண்டா தற்போது புதிய ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளார். தெலுங்கில் நீ வெனசுலே எனும் வரிகளில் தொடங்கும் இப்பாடலின் தமிழ் வெர்ஷனான மந்திர கண்ணிலே பாடலை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்.
பானு ஸ்ரீதேஜா இயக்கியுள்ள இந்த பாடலுக்கு சவுரவ் – துர்கேஷ் இசையமைத்துள்ளார். இந்த பாடலை சின்மயி பாடியுள்ளார்.
டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி நீக்கப்பட்டுள்ள நிலையில், கபிலன் வைரமுத்து எழுதிய பாடலில் சின்மயி பாடியிருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.