திண்டுக்கல்லில் வெளுத்து வாங்கும் மழை
உள்மாவட்டங்கள் மையம் கொண்டிருந்த வலுகுறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது. இதையடுத்து மாவட்டத்தின பல பகுதிகளில் மின்சாரம் முன்னெச்சரிக்கையாக துண்டிக்கப்பட்டது.
வங்கக் கடலில் கடந்த 18-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது வலுவடைந்து கரைகளை கடந்தது.
இக்குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது உள்மாவட்டங்களில் மையம் கொண்டிருக்கிறது. இதனால் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டது.
இதனிடையே திண்டுக்கல்லில் இன்று பிற்பகல் 1 மணிக்கு லேசான மழை தூறல் தொடங்கியது. பின்னர் இது கனமழையானது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல்லில் பல பகுதிகளில் மின்சரம் துண்டிக்கப்பட்டது. இருப்பினும் இயல்புவாழ்க்கை இதுவரை பாதிக்கப்படவில்லை.