புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தாயார் மரணம்: மு.க.ஸ்டாலின் இரங்கல்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தயார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள் (96). பூரணாங்குப்பத்தில் வசித்து வந்த இவர் வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால், நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், ஈஸ்வரி அம்மாள் உடல் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி அம்மாள் நேற்று இரவு மரணமடைந்தார்.இவரது மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் திரு நாராயணசாமி அவர்களின் தாயார் ஈஸ்வரி அம்மாள் அவர்கள் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, தன்னை ஈன்றெடுத்த தாயாரை இழந்த வேதனையிலிருக்கும் புதுவை முதல்வர் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.