அடங்காத நாய்கறி பீதி... மீண்டும் நீண்ட வால் ஆடுகளால் சென்னையில் சர்ச்சை
நீண்ட வால் ஆடுகள் இருக்கின்றன என்பதை நிரூபிக்க சென்னை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவரான தமிழ்செல்வன் ஜோத்பூரில் இருந்து அவற்றை கொண்டு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிக்கியது நாய்கறி என்கிற வதந்தி காட்டுத் தீ போல் பரவியது. ஆனால் ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆடுகள் என ஓட்டல் உரிமையாளர்கள் கூறிவந்தனர்.
சென்னை கால்நடை மருத்துவ பல்கலைக் கழக மருத்துவமனையும் இதனை உறுதி செய்தது. இந்த நிலையில் நீண்ட வால் கொண்ட ஆடுகள் இருக்கின்றன; அவை விலை குறைவு என்பதால்தான் அங்கிருந்து இறைச்சியாக்கி கொண்டு வருகிறோம்.
இதை நிரூபிக்கவே நீண்டவால் ஆடுகள் சிலவற்றை கொண்டு வந்திருக்கிறோம் என்கிறார் சென்னை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன்.