எஸ்.ஆர்.எம். கல்லூரி விடுதியில் அக்கப்போர்- லிப்டில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் கைது
சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி விடுதியில் லிப்டில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எஸ்.ஆர்.எம். கல்லூரி விடுதிக்கு 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி லிப்டில் வந்துள்ளார். அப்போது கல்லூரி ஊழியர் ஒருவரும் லிப்டில் இணைந்துள்ளார்.
அந்த ஊழியர் திடீரென மாணவி முன்பாக ஆபாசமாக நடக்க முயன்றுள்ளார். இத்தகவல் சக மாணவர்களுக்கு தெரியவர கொந்தளித்து போயினர்.
ஆபாசமாக நடக்க முயன்று பாலியல் தொல்லை கொடுத்த நபரை கைது செய்யக் கோரி நேற்று இரவு போராட்டத்தை தொடங்கினர். ஆனால் கல்லூரி நிர்வாகம் இறங்கி வர மறுத்தது.
இப்போராட்டம் தொடர்ந்ததால் வேறுவழியே இல்லாமல் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.